செய்திகள்

சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர் - இயல்பு வாழ்க்கை முடங்கியது

Published On 2018-01-19 05:04 GMT   |   Update On 2018-01-19 05:04 GMT
பூமியின் உச்சக்கட்ட குளிர்பிரதேசமாக சைபீரியாவில் குளிர் வாட்டி வதைக்கிறது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
மாஸ்கோ:

பூமியின் உச்சக்கட்ட குளிர்பிரதேசமாக சைபீரியா உள்ளது. அங்கு தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகளவில் நிலவுகிறது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

கடுமையான குளிர் அலைகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சூடேற்றும் சாதனங்களை பயன்படுத்துமாறும் கூறப்பட்டு உள்ளனர். மொத்தத்தில் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.

இந்த மாத இறுதி வரையில் குளிர் அலைகள் தற்போது இருப்பது போலவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சக்தி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், மின் உற்பத்தி அமைப்புகளுக்கு அரசாங்கம், அவசரகால எச்சரிக்கைகள் வெளியிட்டு உள்ளது. #tamilnews

Tags:    

Similar News