செய்திகள்

இலங்கையில் பெண்கள் மது வகைகளை வாங்க விற்க அனுமதி

Published On 2018-01-12 10:06 GMT   |   Update On 2018-01-12 10:06 GMT
இலங்கையில் பெண்கள் மது வகைகளை வாங்கவும், மது விற்பனை கூடங்களில் பணியாற்றவும் விதிக்கப்பட்டிருந்த 38 ஆண்டுகால தடை தற்போது விலக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:

இலங்கையில் பெண்கள் மது உற்பத்தி மற்றும் விற்பனை கூடங்களில் பணியாற்றவும், மது வகைகளை வாங்கவும் கடந்த 1979-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நாட்டின் சில இடங்களில் உள்ள மதுக் கூடங்களில் அரசின் உத்தரவை மீறிய வகையில் பெண்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சுமார் 38 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த இந்த தடையை ரத்துசெய்து அந்நாட்டின் ஊடகம் மற்றும் நிதித்துறை மந்திரி மங்கலா சமரவீரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிக்கையில் கையொப்பமிட்டுள்ள மங்கலா சமரவீரா, பெண்களுக்கான சமவுரிமையை நிலைநாட்டவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News