செய்திகள்

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்கிறது

Published On 2018-01-12 00:42 GMT   |   Update On 2018-01-12 00:42 GMT
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்வதால் அமெரிக்கா மற்றும் சீனாவை சேர்ந்த தொழில் நுட்பத்துறையினர் பலன் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #DonaldTrump #GreenCard
வாஷிங்டன்:

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டு பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஜனாதிபதி டிரம்பால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகி விட்டால், அது பன்முக விசா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்; குடியேற்ற அளவை தற்போதைய 10 லட்சத்து 5 ஆயிரம் என்பது ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்கும்.

அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்ட மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிரீன் கார்டுகள் வழங்குவதை 1 லட்சத்து 75 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்த்த வகை செய்கிறது. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவை சேர்ந்த தொழில் நுட்பத்துறையினர் பலன் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அங்கு கிரீன் கார்டு பெறுவதற்காக 5 லட்சம் இந்தியர்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.  #DonaldTrump #GreenCard #tamilnews 
Tags:    

Similar News