செய்திகள்

கட்டிட நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக புகார்: பெரு அதிபர் பதவி விலக அமைச்சரவை நெருக்கடி

Published On 2017-12-15 03:12 GMT   |   Update On 2017-12-15 03:12 GMT
தென் அமெரிக்க நாடான பெருவின் அதிபர் பெட்ரோ பாப்லோ குசைன்ஸ்கி கட்டிட நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
லிமா:

தென் அமெரிக்க நாடான பெருவின் அதிபராக உள்ள பெட்ரோ பாப்லோ குசைன்ஸ்கி, நிதி மந்திரியாக இருக்கும் போது பிரேசில் நாட்டை தலைமையமாக கொண்டு செயல்படும் ஒடேபெர்ச்ட் என்ற கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 5 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை குசைன்ஸ்கி மறுத்து வந்த நிலையில், அந்நிறுவனத்தின் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அந்நிறுவனத்தின் ஆலோசகராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பலமிக்க எதிர்க்கட்சியாக உள்ள பாப்புலர் போர்ஸ் கட்சியானது அதிபர் பதவி விலக போர்க்கொடி தூக்கியது.

கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற குசைன்ஸ்கிக்கு சொந்த கட்சியில் மட்டுமல்லாது, அமைச்சரவையிலும் ஆதரவு இல்லாமல் போனது. இதனால், அவர் பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News