செய்திகள்

சிரியாவில் இருந்து ரஷிய படைகள் வெளியேற புதின் உத்தரவு

Published On 2017-12-11 11:19 GMT   |   Update On 2017-12-11 11:35 GMT
சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள ரஷிய ராணுவப் படைகளின் ஒருபகுதியை அங்கிருந்து வெளியேறுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மாஸ்கோ:

சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள ரஷிய ராணுவப் படைகளின் ஒருபகுதியை அங்கிருந்து வெளியேறுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சிப் படையினரை ஒடுக்கவும், அங்கு அட்டூழியம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடவும் ரஷியாவின் விமானப் படையினரும், காலாட் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.



அங்கு ஓரளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள ரஷிய ராணுவப் படைகளின் ஒருபகுதியை அங்கிருந்து வெளியேறி தாய்நாட்டுக்கு திரும்புமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News