செய்திகள்

அர்ஜென்டினா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயம்: 44 வீரர்களின் கதி என்ன?

Published On 2017-11-19 06:34 GMT   |   Update On 2017-11-19 06:34 GMT
அர்ஜென்டினா நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியின்போது மாயமானதால், அதில் பயணித்த 44 வீரர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
பியூனஸ் ஏர்ஸ்:

தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சான்ஜூ யர்னஸ் என்ற நீர் மூழ்கி கப்பல் மார்டெல் பிளாடா கடற்படை தள பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அதில் ராணுவ வீரர்கள் உள்பட 44 ஊழியர்கள் இருந்தனர். அக்கப்பல் கடந்த 3 நாட்களாக திடீரென மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடன் ஆன அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

எனவே அந்த கப்பலை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை ஈடுபட்டுள்ளது. அதில் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மோசமான தட்ப வெப்பநிலை காரணமாக இக்கப்பல் மாயமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் நீர் மூழ்கி கப்பலில் இருந்த 44 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை. இதனால் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News