செய்திகள்

கலிபோர்னியா: கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் பலி

Published On 2017-11-16 07:14 GMT   |   Update On 2017-11-16 07:14 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடையில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் பலியான சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தரம்பீரித் சிங் ஜாசர் என்ற மாணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு படிப்பதற்காக சென்றார். அவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ நகரில் வசித்து வந்தார். படிக்கும் போதே பாதி நேரமாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வந்தார்.



இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜாசர் கடையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்த நான்கு கொள்ளையர்கள் கடையில் இருந்த பொருட்களை சூறையாடினர். அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாசர் கடையில் உள்ள டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். கொள்ளையர்கள் எல்லா பொருட்களையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்றனர். வெளியில் செல்லும் போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஜாசரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஜாசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


அந்த நேரத்தில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஜாசர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவை சோதனை செய்த போலீசார் கொள்ளையர்களில் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான அத்வல் என்பவரை கைது செய்தனர். இவர் தான் ஜாசரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News