செய்திகள்

பாகிஸ்தான்: முன்னாள் அதிபர் முஷாரப் உருவாக்கிய 23 அரசியல் கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி

Published On 2017-11-11 12:22 GMT   |   Update On 2017-11-11 12:22 GMT
பாகிஸ்தானில் 23 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை உருவாக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப் (74). இவர்மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானிம் செயல்பட்டு வரும் 23 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

முஷாரப் இன்று துபாயில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணிக்கு 
பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொது செயலாளராக இக்பால் தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கூட்டணியில் புலம்பெயர்ந்தோர் சமூகத்தினை குறிக்கும் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட வேண்டும். இந்த புதிய அரசியல் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வேண்டும். அனைத்து உறுப்பு கட்சிகளும் ஒரே பெயரில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அமைப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஐ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் இணைய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News