செய்திகள்

10 லட்ச ரூபாய்க்கு ஏலம்போன டிரம்ப் வரைந்த எம்பயர் ஸ்டேட் கட்டிட ஓவியம்

Published On 2017-10-21 11:34 GMT   |   Update On 2017-10-21 11:34 GMT
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் வரையப்பட்ட கறுப்பு-வண்ண எம்பயர் ஸ்டேட் கட்டிட ஓவியம் பத்து லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற தொண்டு நிறுவன ஏலத்திற்காக 12-9 அங்குலமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிட வரைபடத்தை கருப்பு-வண்ணத்தில் வரைந்தார். இது அப்போது நடந்த ஏலத்தில் 100 டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.



இந்நிலையில், அதே ஓவியம் கடந்த 19-ம் தேதி மறுபடியும் ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர். அப்போது அதை ஒரு நபர் 16 ஆயிரம் டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ரூபாயாகும். இதை லாஸ் ஏஞ்சல்ஸில் ஜூலியன் ஏலன்ஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. அந்த ஓவியத்தை வாங்கியவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

கடந்த ஜூலை மாதம், அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதற்கு முன்னர் ஏற்கனவே, டிரம்ப் பயன்படுத்திய பெரராரி ரக சொகுசு கார், கோல்ப் கிளப்பின் ஒரு தொகுப்பு மற்றும் டிரம்ப் கையெழுத்திட்ட விஸ்கி பாட்டில் ஆகியவை ஏலம் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News