செய்திகள்

காபுல் விமான நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல்

Published On 2017-09-27 07:58 GMT   |   Update On 2017-09-27 07:58 GMT
அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ஜிம் மேட்டிஸ் வந்த சிறிது நேரத்தில் காபுல் விமான நிலயத்தின் அருகே இன்று தீவிரவாதிகள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கூடுதலாக அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ஜிம் மேட்டிஸ் இன்று காலை காபுல் வந்தடைந்தார். அவரது விமானம் வந்திறங்கிய சிறிது நேரத்துக்கு பின்னர் காபுலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே தீவிரவாதிகள் ஏவிய ஒரு ராக்கெட் வந்து விழுந்தது.

அடுத்தடுத்து, காபுல் நகரின் பல பகுதிகளில் சுமார் 20 ராக்கெட்கள் ஏவப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News