செய்திகள்

மாலியில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தீவிரவாத தாக்குதல்: 3 வங்காளதேச வீரர்கள் பலி

Published On 2017-09-24 15:26 GMT   |   Update On 2017-09-24 15:26 GMT
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வங்காளதேச அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.நா சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படை முகாம்கள் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் பணியில் இந்த படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நகரான காவோ பகுதியில் அமைதிப்படையினர் சென்ற வாகனம் தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்தது.

இந்த தாக்குதலில் வாகனத்தில் சென்ற மூன்று வங்காளதேச அமைதிப்படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதவிர ஐந்து வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை வங்காளதேச ராணுவமும் உறுதி செய்துள்ளது. ஆனால் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News