செய்திகள்

இந்திய ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Published On 2017-09-22 10:37 GMT   |   Update On 2017-09-22 10:37 GMT
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்:

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவம் நடத்தும் பதில் தாக்குதலில் இருநாட்டைச் சேர்ந்த பலர் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் எல்லையில் உள்ள சப்பார், ஹர்பால், சர்வா பகுதிகளில் இந்தியா ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் 2 பெண்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் காயமடைந்த அனைவரும் அப்பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் சாஹித் அப்பாஸி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News