செய்திகள்

ஊழியர்கள் உடல்நலக் குறைவு: கியூபாவில் தூதரகங்களை அமெரிக்கா மூடுகிறது

Published On 2017-09-18 07:19 GMT   |   Update On 2017-09-18 07:20 GMT
கியூபாவில் ஒருவகை கிருமிகள் மூலம் நோய் பரப்பப்படுவதால் அமெரிக்க தூதரகம் மூடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கும் அதன் அண்டை நாடான கியூபாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை இருந்தது. அதனால் அங்கு தூதரக உறவு துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா கியூபாவுடன் அமெரிக்காவின் உறவை புதுப்பித்தார். அதை தொடர்ந்து கியூபா தலைநகர் ஹவான்னாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஒபாமா கியூபா சென்றார். அவருக்கு கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ சிறப்பான வரவேற்பு அளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்று புதிய அதிபர் ஆனார். ஆனால் கியூபா மீதான ஒபாமாவின் கொள்கையில் அவருக்கு உடன்பாடு இல்லை.

இருந்தாலும் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படாது என உத்தரவாதம் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஹவன்னாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூளைக்கட்டி, மூச்சுத்திணறல், தலைசுற்றல் உள்ளிட்ட புதுவிதமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது ஒருவகை கிருமிகளின் மூலம் ஊழியர்களின் உடல் நலத்தை பாதிக்க பரப்பப்பட்டு வருவதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. எனவே கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை மூட திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதை கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மறுத்துள்ளார். இத்தகைய நோய் தாக்குதலில் கியூபா ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
Tags:    

Similar News