செய்திகள்

புளோரிடாவை கலங்கடித்த ‘இர்மா’ புயல்: மின்சாரம், உணவு இல்லாமல் மக்கள் தவிப்பு

Published On 2017-09-12 08:29 GMT   |   Update On 2017-09-12 08:29 GMT
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நேற்று கடந்த ‘இர்மா’ புயல் பலத்த சேதங்களை உண்டாக்கியதால், லட்சக்கணக்கானோர் மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
நியூயார்க்:


வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்திலிருந்து கரீபியன் தீவுகள் இன்னும் மீளாத நிலையில் நேற்று வரை அங்கு 37 பேர் பலியாகியுள்ளனர்.

செயிண்ட் மார்டின் உள்ளிட்ட பல தீவுகளில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் வீசியது. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

புளோரிடா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சுமார் 6 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொறியாளர்கள் சேதமடைந்த மின்சார நிலையங்களை சரிசெய்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

புளோரிடாவில் மட்டும் புயலினால் இதுவரை 4 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News