செய்திகள்

ஆபாச போட்டோ பிரசுரித்த வழக்கு: இளவரசி கேத் மிடில்டனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு

Published On 2017-09-06 05:13 GMT   |   Update On 2017-09-06 05:13 GMT
ஆபாச போட்டோ பிரசுரித்த பத்திரிகை இளவரசர் வில்லியம், இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாரீஸ்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி இளவரசி கேத்மிடில்டனுடன் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பரில் பிரான்ஸ் சென்று இருந்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்டனர்.

இளவரசி கேத் மிடில்டன் ‘பிகினி’ நீச்சல் உடையில் இருந்தார். பிரான்சில் வெளியாகும் பிரபல பத்திரிகை அத்துமீறி அவர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து பிரசுரித்தது.

அதை எதிர்த்து பிரான்ஸ் கோர்ட்டில் இளவரசர் வில்லியம் - கேத்மிடில்டன் தம்பதி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தனர். அதில் தங்களுக்கு ரூ.15 கோடி நஷ்டஈடு கேட்டு இருந்தனர்.


கோர்ட்டில் விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஆபாச போட்டோ பிரசுரித்த பத்திரிகை இளவரசர் வில்லியம், இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் ஆபாச போட்டோ எடுத்த புகைப்பட நிபுணர்கள் சிரில் மொராயூக்கு ரூ.10 லட்சமும், டொம்னிக் ஜகோ விட்சுக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளருக்கு தலா ரூ.36 கோடி அபராதமும் விதித்தது.
Tags:    

Similar News