செய்திகள்

எகிப்து: பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி

Published On 2017-08-29 08:44 GMT   |   Update On 2017-08-29 08:44 GMT
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை மத்திய பகுதியான பெனி சூயெப் நகருடன் இணைக்கும் பிரதான சாலையில் இன்று பஸ்சுடன் லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கெய்ரோ:

எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் எதிர்திசையில் வேகமாக வந்த லாரி 62 பேருடன் வந்த அந்த பஸ்சின்மீது பயங்கரமாக மோதியது.

இதில் நிலைதடுமாறிய பஸ், சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்துக்குள் கவிழந்தது. இந்த கோர விபத்தில் 14 பேர்  உயிரிழந்ததாகவும், 32 பயணிகள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது.

போதுமான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் மற்றும் படுமோசமான சாலைகளால் எகிப்து நாட்டில் சாலை விபத்துகள் மிக அதிகமாக உள்ளதாகவும், இதனால், ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் மக்கள் சாலை விபத்துகளில் பலியாகி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News