செய்திகள்

இங்கிலாந்தில் குடிபோதையில் மிதந்த பேராசிரியை விமானத்தில் இருந்து வெளியேற்றம்

Published On 2017-08-20 05:13 GMT   |   Update On 2017-08-20 05:13 GMT
இங்கிலாந்தில் குடிபோதையில் மிதந்த பேராசிரியை விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

லண்டன்:

இங்கிலாந்தை சேர்ந்தவர் மேக்னாகுமார் (30). இவர் கென்சிங்டனில் உள்ள துர்காம் பல்கலைக்கழகத்தில் சட்டதுறையில் பேராசிரியை ஆக பணி புரிகிறார். இவர் லண்டனில் இருந்து கனடாவில் உள்ள மாண்ட் ரிடியல் நகருக்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் புறப்பட்டார்.

விமானம் ஹீத்ரூவில் இருந்து புறப்பட்டது. உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியை மேக்னாகுமார் திடீரென கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். உடனே அவரை விமான பணிப் பெண்களும் ஊழியர்களும் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது அவர் அளவுக்கு மீறிய குடிபோதையில் இருந்தார்.

அது குறித்த தகவல் விமானிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் விமானம் லண்டன் ஹீத்ரூவில் தரை இறக்கப்பட்டது. உடனே அவரை விமானத்தில் இருந்து வெளியேறும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர் மறுத்து சீட் பெல்ட்டுடன் இருந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார். அவருக்கு ரூ.3 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News