செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தொடரும் தாக்குதல்: பின்லாந்தில் பொதுமக்கள் மீது சரமாரி கத்திக்குத்து - 2 பேர் பலி

Published On 2017-08-18 17:33 GMT   |   Update On 2017-08-18 17:33 GMT
பின்லாந்து நாட்டில் பொதுமக்கள் மீது மர்மநபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
ஹெல்சின்கி:

பின்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள டுர்கு என்ற நகரத்தில் இருக்கும் மார்கெட்டில் மக்கள் அதிகமாக கூடியிருக்கும் போது, அங்கு கையில் கத்தியுடன் வந்த நபர் பொதுமக்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால், மக்கள் அங்கு சிதறி ஓடினர்.

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானதாகவும், 8-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல், வாகனங்களை மோத விட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. நேற்று, ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது தீவிரவாதி வேனை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News