செய்திகள்

நைஜீரியா: போகோ ஹராம் பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பலி

Published On 2017-08-15 23:36 GMT   |   Update On 2017-08-15 23:36 GMT
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபுஜா:

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாத இயக்கம் பெருமளவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அங்குள்ள கிராமத்தினரை பிணையக் கைதிகளாக பிடித்து அரசிடம் பேரம் பேசுவது உள்ளிட்ட அட்டூழியங்களில் இந்த இயக்கம் ஈடுபட்டு வருகிறது. இவர்களை வேட்டையாடும் பணியில் பண்ணாட்டு ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான மைதுகுரி என்ற நகரின் பக்கத்தில் இருக்கும் கோண்டுகா கிராமத்தில் உள்ள அகதிகள் முகாம் அருகே நேற்று அந்த இயக்கத்தைச் சேர்ந்த இரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டிவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த கோர தாக்குதலில் அங்கிருந்த 27 பேர் பலியானதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போகோ ஹராம் தீவிரவாத இயக்கம் இதுவரை நடத்தியுள்ள தற்கொலைப்படை தாக்குதலை பெண் தீவிரவாதிகளே அதிகளவில் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News