செய்திகள்

சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி, 600 பேர் மாயம் - சர்வதேச உதவியை கோரினார் அதிபர்

Published On 2017-08-15 19:51 GMT   |   Update On 2017-08-15 19:51 GMT
சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியை அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.
ப்ரீடவுன்:

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 600-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவியை அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.



பலியானவர்களில் 170 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்த நிலையில், 600-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். இவர்களது கதி என்னவென்று தெரியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்ப்புப்பணிகளுக்காக சர்வதேச உதவிகளை அந்நாட்டின் அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.



பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து உணவின்றி தவித்து வருவதால், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக சர்வதேச நாடுகள் உதவிட வேண்டும் என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News