செய்திகள்

ஈரான் அரசில் 3 பெண்களுக்கு முக்கிய பதவி: விமர்சனங்களை அடுத்து அதிபர் ருஹானி நடவடிக்கை

Published On 2017-08-11 00:16 GMT   |   Update On 2017-08-11 00:16 GMT
ஆண்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை பட்டியலை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளான ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி தனது அரசில் 3 பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அறிவித்துள்ளார்.
தெஹ்ரான்:

மேற்காசியாவில் உள்ள மிகவும் முக்கியமான நாடு ஈரான். ஈரான் நாட்டின் அரசியல் உலகில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் ஆகும்.

இதனிடையே, கடந்த மே மாதம் நடந்த ஈரான் அதிபர் தேர்தலில் ஹாசன் ருஹானி 58 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்றிருந்தார்.

அவரது அமைச்சரவையில் அதிகளவில் பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 17 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில் ஒரு பெண் உறுப்பினர் கூட இடம்பெறவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் விமர்சனம் செய்தன.



ஈரான் அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தேர்தலின் போது ஹாசன் ருஹானி கட்சியினர், வாக்குறுதி அளித்திருந்தார்.

ஊடகங்களின் விமர்சனங்களை அடுத்து, ஈரான் அரசில் 3 பெண்களுக்கு மிகவும் முக்கியமான பதவிகளை அதிபர் ஹாசன் ருஹானி அறிவித்துள்ளார்.

ருஹானியின் முதல் ஆட்சியில் சுற்றுச் சூழல் துறையின் தலைவரான இருந்த எப்தெகருக்கு பெண்கள் மற்றும் குடும்ப நலத் துறை துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவராக லயா ஜோனெடியும், சமூக உரிமைகள் துறைக்கான தலைவரின் உதவியாளர் பொறுப்பு மோலவெர்டி-யும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆண்கள் மட்டுமே கொண்ட அமைச்சரவையில் ருஹானி எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.
Tags:    

Similar News