செய்திகள்

பாகிஸ்தானின் அன்னை தெரசா டாக்டர் ரூத் பாவ் காலமானார்

Published On 2017-08-10 16:24 GMT   |   Update On 2017-08-10 16:24 GMT
பாகிஸ்தானின் அன்னை தெரசா என அழைக்கப்படும் டாக்டர் ரூத் பாவ் உடல்நிலை சரியில்லாத நிலையில் காலமானார்.
இஸ்லாமாபாத்:

யாருமே தொடுவதற்கு கூட அருவெறுப்பு அடையும் நிலையில் உள்ள தொழு நோயாளிகளை தொட்டு அவர்களுக்கு அன்புடனும்,ஆதரவுடனும் சிகிச்சை அளித்தவர் அன்னை தெரசா. இவரை போலவே, சேவை மனப்பான்மை கொண்ட ஒரு டாக்டர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்.

ஜெர்மனியில் பிறந்தவர் டாக்டர் ரூத் பாவ். இவர் 1960ஆம் ஆண்டில் முதல் முதலாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு சென்ற அவர் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரை பாகிஸ்தானின் அன்னை தெரசா என்று கூறுகின்றனர்.

இதற்கிடையே, 87 வயதான டாக்டர் ரூத் பாவ், கடந்த சில வாரங்களாக வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், டாக்டர் ரூத் பாவ் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது சேவையை பாராட்டி பாகிஸ்தான் அரசு பல மதிப்பு மிகுந்த விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News