செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல்: 26 வீரர்கள் பலி

Published On 2017-07-26 09:42 GMT   |   Update On 2017-07-26 09:42 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
காந்தகார்:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர், மீண்டும் தலைதூக்கிய தலிபான்கள் அரசுப் படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தாக்குதல் அதிகரித்தவண்ணம் உள்ளது. 2016-ம் ஆண்டு வீரர்கள் உயிரிழப்பு 35 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டும் ஏராளமான இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தகார் மாகாணம் கர்ஜாலி பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தலிபான்கள் நேற்று இரவு திடீர் தாக்குதலை நடத்தி உள்ளனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை நிலைகுலையச் செய்தனர்.



நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் ராணுவம் தரப்பில் 26 வீரர்கள் உயிரிழந்ததாகவும், தலிபான்கள் தரப்பில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தவ்லத் வஜிரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News