search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான்கள் தாக்குதல்"

    ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் இரு தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகளை அரசுப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள காக்ரிஸ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கூட்டுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் குலாம் மற்றும் முஸ்தபா என்ற இரு தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகளை அரசுப் படையினர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். #Afghanistanmilitants #militantskilled #airraids
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
     
    இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்திற்குட்பட்ட  காகா சப்ஸ் போஷ் மற்றும் காய்சார் மாவட்டங்களில் நேற்றிரவு  பயங்கரவாதிகளை குறிவைத்து  விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 உள்ளூர் பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 3 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanistanmilitants #militantskilled #airraids
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். #AfghanSoldiers #Talibanattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


    இங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்குட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அள்ளிச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #AfghanSoldiers #Talibanattack
    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் பர்யான் மாகாணத்தில் வெடித்த மோதலில் இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். #Afghan #Taliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பர்யான் மாகாணத்தில் அன்ட்கோய் மற்றும் கர்கான் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.



    அவர்களுக்கும் ராணுவ  வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 11 பயங்கரவாதிகளும், 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அந்த மாகாணத்தின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மற்ற பகுதிகளில் இருந்து உடனடியாக கூடுதலான படைகள் அனுப்பப்பட்டால்தான் இங்குள்ள பயங்கரவாதிகளை சமாளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghan #Taliban #Talibanskilled
    ×