செய்திகள்

சம்பள உயர்வு கேட்டு டிரைவர்கள் போராட்டம்: பாகிஸ்தானில் ரெயில் சேவை முடங்கியது

Published On 2017-07-23 07:44 GMT   |   Update On 2017-07-23 07:44 GMT
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரெயில் டிரைவர்கள் இன்று நடத்திவரும் போராட்டத்தால் பாகிஸ்தானில் ரெயில் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்:

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ரெயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை 12-01 மணியளவில் நாட்டின் அனைத்து வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த ரெயில் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

முன்னதாக, அருகாமையில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டன. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடு வழியில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தை முடக்கும் வகையில் பல ரெயில் டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ரெயில் டிரைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News