செய்திகள்

99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்

Published On 2017-07-23 04:51 GMT   |   Update On 2017-07-23 04:51 GMT
99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி தோன்றுகிறது. மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
நியூயார்க்:

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும்.

இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும்.

இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் முழு சூரிய கிரகணம் வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி தோன்றுகிறது.

ஆனால் இதை பொது மக்கள் வெறுங்கண்ணால் பார்க்க கூடாது. அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கிரகண கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பாதுகாப்பற்றது. இது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News