செய்திகள்

எகிப்தில் 28 பேருக்கு மரண தண்டனை: அரசு வழக்கறிஞர் கொலை வழக்கில் தீர்ப்பை உறுதி செய்தது கோர்ட்

Published On 2017-07-22 13:20 GMT   |   Update On 2017-07-22 13:21 GMT
எகிப்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கொலை வழக்கில் 28 பேருக்கான மரண தண்டனையை குற்றவியல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
கெய்ரோ:

எகிப்தில் கடந்த 2015-ம் ஆண்டு அரசு மூத்த வழக்கறிஞரான ஹிஷாம் பரக்கத் கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதவிட்டு வெடிக்கச் செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுதொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் ஹமாஸ் தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், 28 பேருக்கு மரண தண்டனையும், 15 பேருக்கு தலா 25 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து, நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையானது, எகிப்து நாட்டின் சட்டப்படி அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு தலைமை முப்தி ஒப்புதல் அளித்ததையடுத்து இன்று கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News