செய்திகள்
டொனால்டு டிரம்ப் ஜூனியர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவுடன் கள்ளத்தொடர்பு - டிரம்ப் மகன், மருமகனிடம் விரைவில் விசாரணை

Published On 2017-07-22 08:59 GMT   |   Update On 2017-07-22 08:59 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக விசாரித்துவரும் பாராளுமன்ற குழுவின் முன்னர் டொனால்ட் டிரம்ப் மகன், மருமகன் ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கின்றனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக விசாரித்துவரும் பாராளுமன்ற குழுவின் முன்னர் டொனால்ட் டிரம்ப் மகன், மருமகன் ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கின்றனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் நேரடி தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை விசாரணை நடத்தி வருகிறது.  

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரை விசாரணைக்கு அழைக்க தனக்கு அதிகாரம் இருப்பதாக  இந்த விசாரணையை நடத்தும் குழு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை டிரம்ப் ஜூனியருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. தேவைப்பட்டால் விசாரணைக்கு அவரையும் அழைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜேரட் குஷ்னர்

இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு நிர்வாகி பால் மனபோர்ட் மற்றும் கிளென் சிம்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர், செனட் சபையின் புலனாய்வு குழுவின் முன் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார். இவர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News