செய்திகள்

இடிபாடுகளில் சிக்கியோரை கண்டுபிடிக்கும் ‘ரோபோ’: விஞ்ஞானிகள் உருவாக்கினர்

Published On 2017-07-22 06:26 GMT   |   Update On 2017-07-22 06:33 GMT
இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டு பிடிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது திராட்சை கொடி போன்று அமைப்பு கொண்டது.
வாஷிங்டன்:

நிலநடுக்கம் மற்றும் விபத்துகளின் போது கட்டிடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கி காப்பாற்ற வழியின்றி உயிரிழக்கின்றனர். அவர்களை கண்டு பிடித்து மீட்க வழி செய்யும் புதியவகை ‘ரோபோ’வை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இத்தகையை சாதனை படைத்துள்ளனர். இது திராட்சை கொடி போன்று அமைப்பு கொண்டது.

நரம்பு செல்கள், பூஞ்சை காளான் போன்ற தோற்றங்களிலும் இது தோன்றும் டியூப் (குழாய்) வடிவிலான இந்த ரோபோ கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஊடுருவி செல்லும் திறன் படைத்தது.

இந்த டியூப்புக்குள் காற்றும், திரவமும் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் அது நகர்ந்து ஊடுருவி செல்லும் இடிபாடுகளுக்குள் உடல்கள் கிடந்தால் அந்த ரோபோ நகராமல் அங்கேயே நின்று விடும். அதன் மூலம் இடிபாடுகளில் சிக்கி கிடப்போரை கண்டு பிடித்து மீட்க முடியும்.
Tags:    

Similar News