செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் சவூதி அரேபியா

Published On 2017-07-21 00:09 GMT   |   Update On 2017-07-21 00:09 GMT
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
ஜெட்டா:

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலைமையிலான கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களை கையாள்வதற்காக உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்படும் எனவும், இந்த அமைப்புக்கு முகம்மது அல் ஹவாய்ரினி தலைவராக மன்னர் நியமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்நாட்டு வர்த்தக ஆணையத்தின் தலைவராக அரச குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது எல் குவைஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News