செய்திகள்

கட்சி உறுப்பினர்கள் மத நம்பிக்கையை கைவிட வேண்டும்-சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவு

Published On 2017-07-19 09:59 GMT   |   Update On 2017-07-19 09:59 GMT
சீனாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை மத நம்பிக்கையை கைவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
பீஜிங்:

சீனாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சனிக்கிழமை குயுஷி பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அக்கட்சியின் விதிமுறைகளை பற்றி கூறப்பட்டிருந்தது.

இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் வாங் சுயான் கூறுகையில், கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நலனிற்காக தங்கள் மத நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும். மத நம்பிக்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவது கட்சியின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். மேலும் இதனால் கட்சிப் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட முடியாது. கட்சி உறுப்பினர்கள் கட்சியின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறினால் தண்டனை வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

சீனாவில் புத்த மதத்திற்கு அடுத்து கிறிஸ்தவ மதம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. 65 மில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். 20 மில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்.

மேலும் தனது கட்சியில் உள்ள உறுப்பினர்களில் 88.76 மில்லியன் பேர் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டில் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங்கை மீண்டும் கட்சித் தலைவராக தேர்வு செய்ய முன்மொழிவார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News