செய்திகள்

ஜப்பான்: அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதியதில் மாயமான கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

Published On 2017-06-18 05:04 GMT   |   Update On 2017-06-18 05:04 GMT
ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதிய விபத்தில் மாயமான கடற்படை வீரர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
டோக்கியோ:

ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.

இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே வந்த ஏசிஎஸ் கிரில்டல் என்ற சரக்கு கப்பலுடன் மோதியது. இதில் 30 ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்ததால் அதிக எடையுடன் இருந்த சரக்கு கப்பலால் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது.

கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 வீரர்கள் மாயமாகினர். இந்நிலையில், இவர்களை தேடும் பணிகள் நடைபெற்றன. சுமார் 24 மணி நேரம் மாயாமாகியிருந்த வீரர்களின் உயிரற்ற உடல்கள் விபத்துக்குள்ளான ஜப்பான் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட கடற்படை வீரர்களின் உடல்கள் கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, வீரர்கள் யார் என கண்டறியப்படும். ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
Tags:    

Similar News