செய்திகள்

ஹண்டுராஸ் அதிபர் தேர்தலில் தொலைக்காட்சி நடிகருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

Published On 2017-05-23 00:47 GMT   |   Update On 2017-05-23 00:47 GMT
ஹண்டுராஸ் அதிபர் தேர்தலில் பிரபல தொலைக்காட்சி நடிகரான சல்வடோர் நஸ்ரல்லாவை இடதுசாரி சுதந்திர கட்சி மற்றும் மறுசீரமைப்பு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரிக்க முன்வந்துள்ளன.
தெகுசிகல்பா:

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹண்டுராசில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று, வரலாற்றிலேயே முதல் முறையாக 2-வது வாய்ப்பை பெற அதிபர் ஜுவன் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸ் முனைப்பு காட்டி வருகிறார். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் அவருக்கு ஆதரவாகவே முடிவுகள் வந்தன.

நாடு முழுவதும் 36 சதவீத மக்கள் ஒர்லாண்டோவை ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் அமைந்து இருந்தன. அவரை அடுத்த வந்த லூயிஸ் செலயாவுக்கு வெறும் 18 சதவீத மக்களின் ஆதரவு இருப்பதாக தெரியவந்தது. இதனால் அதிபர் ஜுவன் ஒர்லாண்டோ எளிதில் வெற்றி பெறக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதி வந்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, பிரபல தொலைக்காட்சி நடிகரான சல்வடோர் நஸ்ரல்லாவை இடதுசாரி சுதந்திர கட்சி மற்றும் மறுசீரமைப்பு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரிக்க முன்வந்துள்ளன. இதனால் அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய நஸ்ரல்லா, ‘இன்று நாம் யாரும் தடுக்க முடியாத படையாக உள்ளோம். போதைப்பொருள், வன்முறை, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வழிமுறைகள் எதுவும் இனி இருக்காது’ என்று கூறினார். 
Tags:    

Similar News