செய்திகள்

கியூபா ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து: 8 பேர் பலி

Published On 2017-04-30 05:19 GMT   |   Update On 2017-04-30 05:19 GMT
கியூபா ராணுவ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி பலியானார்கள்.
ஹவானா:

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து ஒரு ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது. கியூபாவில் கடந்த 2010-ம் ஆண்டு விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் 68 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News