செய்திகள்

அமெரிக்காவில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்

Published On 2017-04-29 05:49 GMT   |   Update On 2017-04-29 05:49 GMT
அமெரிக்காவில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.இது குறித்து ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் ஒக்ல கோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ். இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த பிப்ரவரி மாதம் தெரிய வந்தது. இருந்தாலும் கருக்குழந்தையை அழிக்ககணவன், மனைவி இருவரும் விரும்பவில்லை. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது.


ஆனால் அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டன. இது குறித்து ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஹலோ, குட்பை அவர் சுவீட் ஈவா’ என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த நூற்றுக் கணக்கானோர் சிசுஉடல் உறுப்புகளை தானம் செய்த தம்பதிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News