செய்திகள்

செனகல், காம்பியா நாடுகளில் படகு விபத்து: 30 பேர் உயிரிழப்பு

Published On 2017-04-26 01:05 GMT   |   Update On 2017-04-26 03:28 GMT
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான செனகல் மற்றும் காம்பியாவில் நடைபெற்ற இரண்டு படகு விபத்துகளில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
டகார்:

மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடல் பகுதியில் அடுத்தடுத்து உள்ளது செனகல் மற்றும் காம்பியா நாடுகள். இந்த இரண்டு நாடுகளில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு படகு விபத்து சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
 
முதலில் மத்திய செனகலின் தீவு பகுதியில்  72 பேருடன் சென்ற படகு கவிழந்து நேற்று விபத்துக்குள்ளானது. படகில் அதிக பேருடன் சென்றதால் இந்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 51 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், மற்றொரு விபத்து காம்பியா ஆற்றில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 8 மீனவர்கள் உயிரிழந்தனர். தியாபுகுக் மற்றும் தபஜங் ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

Similar News