தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பான கட்டுரை- நாளிதழ்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

Published On 2022-09-27 10:11 GMT   |   Update On 2022-09-27 10:11 GMT
  • காலை உணவு திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன்.
  • பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதனை மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கபள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பள்ளிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள நாளிதழ்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள தினத்தந்தி, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கன் க்ராணிக்கல் உள்ளிட்ட நாளிதழ்களுக்கு எனது நன்றி!.

காலை உணவு திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன். எவ்விதக் குறைபாடுமின்றி, சரியாக நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறேன்.

திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருகிறது!

பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது!

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News