தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்- தனித்து போட்டியிட பாரதிய ஜனதா திட்டம்?

Published On 2023-01-21 06:01 GMT   |   Update On 2023-01-21 06:01 GMT
  • பா.ஜனதா மேலிடம் அனுப்பிய ரகசிய குழு ஒன்றும் ஈரோட்டில் சர்வே நடத்தி உள்ளது.
  • பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட த.மா.கா. விட்டு கொடுத்துவிட்டது.

இன்னொரு பிரதான கூட்டணி கட்சியான பா.ஜனதா இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது.

இப்படி 3 குழுக்களாக அ.தி.மு.க. தனித்தனியாக போட்டியிடுவதால் பா.ஜனதாவும் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக கடலூரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடம் அண்ணாமலை கருத்து கேட்டுள்ளார்.

இதுதவிர பா.ஜனதா மேலிடம் அனுப்பிய ரகசிய குழு ஒன்றும் ஈரோட்டில் சர்வே நடத்தி உள்ளது.

இதற்கிடையில் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

எனவே நிலைமைகளை டெல்லி மேலிடம் ஆராய்ந்து வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைவர்கள் இன்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசுகிறார்கள்.

இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கோருகிறார்கள்.

பா.ஜனதா ஆதரிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது அதன் பிறகே தெரிய வரும்.

Tags:    

Similar News