தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி     திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்- வங்கிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல்

Published On 2022-07-19 16:26 GMT   |   Update On 2022-07-19 17:10 GMT
  • ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
  • நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன் என ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்றும், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் எழுதிய கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன்.

கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News