தமிழ்நாடு
கொரோனா வைரஸ்

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு

Published On 2022-05-02 07:10 GMT   |   Update On 2022-05-02 07:10 GMT
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் சென்னையில் அதிகபட்சமாக 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 347 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் அடையாற்றில் அதிக பட்சமாக 194 பேர், தேனாம்பேட்டையில் 39 பேர், அண்ணாநகரில் 29 பேர், சோழிங்கநல்லூரில் 10 பேர் இருக்கிறார்கள். மற்ற அனைத்து மண்டலங்களிலும் ஒற்றை இலக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாத இறுதியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய 3 மண்டலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர்.

இதற்கிடையே நோய் தொற்று பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து இருப்பதை தொடர்ந்து இந்த 3 மண்டலங்களிலும் மீண்டும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக தற்போது மீண்டும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் நோய் தொற்று பரவல் உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வருமாறு: திருவொற்றியூர்1, மணலி1, மாதவரம்3, தண்டையார்பேட்டை4, ராயபுரம்7, திரு.வி.க.நகர்5, அம்பத்தூர்7, அண்ணா நகர்26, தேனாம்பேட்டை41, கோடம்பாக்கம்19, வளசரவாக்கம்5, ஆலந்தூர்7, அடையாறு179, பெருங்குடி6, சோழிங்கநல்லூர்11, பிற மாவட்டங்கள்23.

Tags:    

Similar News