தமிழ்நாடு
தமிழக பள்ளிக் கல்வி இயக்ககம்

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு கிடையாது- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Update: 2022-04-03 00:32 GMT
6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13-ந் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன.
சென்னை:

மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது. 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல்  13-ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும். 

 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும். 

2022-23ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24ஆம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News