search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கல்வித்துறை"

    • கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை போராட்டம்.
    • சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை என 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

    19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியானது.

    இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது என தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், சம்பளம் படித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.

    • வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவு.

    அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

    19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
    • புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.

    புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

    இதற்கு பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்த வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.

    • புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    • நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.

    சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எதிர்வரும் மழைக் காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

    1. எல்லா பள்ளிகளிலும் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டிட மேற்கூரையில் விழுந்து குப்பையாக சேர்ந்துள்ளது, பல பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது.

    மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகளை அகற்றிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    2. ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

    3. தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.

    4. பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    5. பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    6. பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்களை அணுகிப் பெற்று, பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    7. நடமாடும் மருத்துவக் குழு. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சென்னை :

    பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கற்பித்தல் பணியில்...

    * தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட தேர்வு குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்ய வேண்டும். மாவட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை, மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு வருகிற 14-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அந்த பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்வு குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.

    * அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது.

    * பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றசாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொதுசேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.

    * அரசியலில் பங்குபெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது. கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் (டியூசன் எடுப்பவர்கள்) ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களின் பாடச் சுமை குறைந்ததால் அதனை மட்டும் படித்து தேர்வு எழுதினர்.
    • கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு பள்ளிகள் முழு அளவில் செயல்படவில்லை. குறைவான நாட்களே செயல்பட்டதால் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

    பொதுத்தேர்வு எழுதிய 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டது.

    மாணவர்களின் பாடச் சுமை குறைந்ததால் அதனை மட்டும் படித்து தேர்வு எழுதினர். இந்த நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான வழிகாட்டிகள், நாட் குறிப்பு போன்றவை பள்ளி கல்வித் துறை மூலம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. பள்ளிகள் நடைபெறும் நாட்கள், காலாண்டு, அரையாண்டு தேர்வு, பொதுத்தேர்வு தேதிகள் போன்றவை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி இந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 20-ந்தேதி பிளஸ்-2விற்கும் 27-ந்தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    இந்த வருடம் முழு அளவில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு பாடங்களும் வழக்கம் போல் நடத்த வேண்டும் என்று கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரிளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    எவ்வித பாடப்பகுதியையும் தவிர்க்காமல் பாட திட்டத்தில் உள்ள பாடங்களை அந்தந்த காலத்திற்குள் முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி கல்வித்துறையின் உத்தரவால் 9-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நடந்து முடிந்துள்ள 9-ம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்து அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    9-ம் வகுப்பு இறுதி தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் தேர்வை எப்படி எழுதி உள்ளனர் என்பதை ஆசிரியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இறுதி தேர்வு மதிப்பெண்களையும் எக்காரணம் கொண்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு மாணவர் அனைத்து தேர்வுகளையும் எழுதி இருந்தாலே போதும் என்பதை கருத்தில் கொண்டு தேர்ச்சி விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல பள்ளிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இறுதி ஆண்டு தேர்வை சரியாக எழுதாத மாணவ-மாணவிகள் சிலர் பெயில் ஆகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களும், வெற்றி பெற்றவர்களாக இனி அறிவிக்கப்பட உள்ளனர். பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவால் 9-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவால் 9-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வை சரியாக எழுதாத மாணவ-மாணவிகளும் பாஸ் ஆகி 10-ம் வகுப்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் பெற்றோர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாகவும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதாலும் பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அரசு நிர்வாகத்துக்கு முதுகெலும்பாக உள்ளவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். அவர்கள் முடக்கப்பட்டால், அரசு நிர்வாகம் முடங்கி விடும்.

    எனவே அவர்களை கைது செய்யும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மேலும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

    ×