தமிழ்நாடு
மக்கள் நீதி மய்யம்

கமல் கட்சி மாநில செயலாளர் பொன்னுசாமி விலகல்

Update: 2022-02-28 05:17 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மாநில செயலாளரும், தொழிற்சங்க பேரவை தலைவருமான பொன்னுசாமி விலகி உள்ளார்.
சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து மாநில செயலாளரும், தொழிற்சங்க பேரவை தலைவருமான பொன்னுசாமி விலகி உள்ளார்.

இவர் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். தொழிற்சங்க பேரவை தலைவராகவும், கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு நேற்று கடிதம் கொடுத்தார். அவரது கடிதத்தை கட்சி தலைமை ஏற்றுக்கொண்டு அவரை விடுவித்தது.
Tags:    

Similar News