மேட்டூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
பதிவு: ஜனவரி 27, 2022 16:44 IST
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் இந்திராநகர் பகுதி உள்ளது. இப்பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மேட்டூர் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அலுவலகம் முன்பாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.