தமிழ்நாடு
கோப்பு படம்

சேலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் 21 ஆக அதிகரிப்பு

Published On 2022-01-16 08:18 GMT   |   Update On 2022-01-16 08:18 GMT
சேலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாட்டு பகுதிகள் 21 ஆக அதிகரிக்கபப்ட்டு உள்ளன.
சேலம்:

சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதி கரித்து வருகிறது. இத னால் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களிக் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. 

3 பேருக்கு அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பகுதிகளை  தடை செய்யப்பட்ட பகுதியாக  மாநகராட்சி அறிவித்து வருகிறது. அந்த வகையில் சேலத்தில் 21 இடங்கள் தடை செய்யப் பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரவோ, அப்பகுதிக்குள் யாரும் செல்லவோ அனுமதி கிடையாது. அத்தியாவசிய பொருட்கள் தடை செய் யப்பட்ட பகுதிகளில் மாநக ராட்சி ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

சேலம் மாநகராட்சி பகுதியில் இதுவரை தொற் றால் பாதிக்கப்பட்ட 914பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொடர்ந்து மாந்காராட்சி முழுவதும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News