தமிழ்நாடு
சென்னை மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் - நள்ளிரவில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

Published On 2021-12-30 19:43 GMT   |   Update On 2021-12-30 19:43 GMT
சென்னை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு இரவு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை ஆய்வு செய்தார்.
சென்னை:

சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்தார்.  

மழை பாதிப்பு மற்றும் மாநகராட்சி மேற்கொண்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.  அப்போது மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி
விளக்கம் அளித்தார். அமைச்சர் சேகர்பாபு  உடன் இருந்தார்.



மேலும் மக்கள் அளித்துள்ள புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர்,  முதலமைச்சரிடம் தெரிவித்தார். பின்னர் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெறியேற்றும் பணி குறித்தும்  முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News