செய்திகள்
பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்ற லியோனி

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்றார் லியோனி

Published On 2021-07-12 10:56 GMT   |   Update On 2021-07-12 12:44 GMT
மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தேவையற்ற பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்ற லியோனி கூறினார்.
சென்னை:

தமிழக அரசின் பாடநூல் கழகத்தின் தலைவராக திமுக பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். பொது மேடைகளில் பெண்களைப் பற்றிய அவதூறு கருத்துக்களை கூறிய ஒருவர் இதுபோன்ற பதவிக்கு வரக்கூடாது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கருத்து கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழக அரசின் பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் கழகத்தின்  தலைவராக லியோனி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார். 

லியோனி, பள்ளி ஆசிரியராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மற்றும் திரைப்பட நடிகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்தில் பதவியேற்ற பிறகு பேசிய லியோனி, மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தேவையற்ற பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும், பாடத்திட்டங்கள் எளிமைப்படுத்தப்படும் என்றும் கூறினார். அறிவியல் பாடங்களைப் பொருத்தவரை மாணவர்கள் எளிமையாகவும் இனிமையாகவும் படிக்கும் வகையில் உருவாக்கப்படும் எனக் கூறினார்.
Tags:    

Similar News