செய்திகள்
கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காட்சி.

திருப்பூரில் கார் ஆம்புலன்ஸ் திட்டம்-மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-05-30 07:55 GMT   |   Update On 2021-05-30 08:27 GMT
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கை மையம் மற்றும் கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இன்று 3 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.முதலில் ஈரோட்டில் ஆய்வு பணிகளை முடித்த மு.க.ஸ்டாலின், பின்னர் திருப்பூர் வந்தார்.



திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
  
இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆம்புலன்ஸ் ற்றாக்குறையை போக்கும் விதமாக 20 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைத்தார்.மேலும் 6 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி ஆணையையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியம், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழக வேளாண்மை துறை செயலாளரும், திருப்பூர் மாவட்ட  கொரோனா தடுப்பு  சிறப்பு கண்காணிப்பாளருமான  சமயமூர்த்தி, திருப்பூர் மாவட்ட கலெக்டர்  விஜயகார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News