செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

Published On 2021-04-09 09:31 GMT   |   Update On 2021-04-09 09:31 GMT
கோவையில் கருப்பண்ண வீதி பகுதியில் அதிக கூட்டம் காணப்படுவதால் கருப்பண்ண வீதியை மூட மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை:

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 427 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முகக்கசவம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் இதுவரை 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை கருப்பண்ண வீதி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அந்த பகுதியில் உள்ள 16 வீடுகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கருப்பண்ண வீதி பகுதியில் அதிக கூட்டம் காணப்படுவதால் கருப்பண்ண வீதியை மூட மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கருப்பண்ண வீதியை மூட மாநகராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
Tags:    

Similar News