செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூரில் தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது

Published On 2021-04-04 08:15 GMT   |   Update On 2021-04-04 09:34 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்தனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 544ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 467 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் சிகிச்சை பலன் இன்றி 226 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள சுகாதாரத்துறை ஒரு பகுதியில் 3, 5பேர் வரை பாதிக்கப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்படுகிறது.

இருப்பினும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் மக்கள் நடமாடி வருகின்றனர். சமூக இடைவெளி பின்பற்றாமல் பல இடங்களில் பொதுமக்கள் குவிகின்றனர். பொதுமக்கள் காட்டும் அலட்சியமே கொரோனா அதிகரிப்புக்கு காரணமாகி விடும். எனவே தடுப்பு வழிகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News